என் மலர்
நீங்கள் தேடியது "Hair Growth"
- முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம்.
- ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம்.
வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம். இண்டிகோ பவுடரை, அவுரி இலை பொடின்னு சொல்லுவாங்க. ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம். இந்த அவுரி இலை பொடியை வழக்கமாக ஹென்னா பொடியோடு சேர்த்து, கலந்து ஹேர்பேக் போடுவார்கள். அது கொஞ்சம் சிரமமான விஷயம். அதற்கு கொஞ்சம் நேரமும் எடுக்கும். ஆனால் சட்டுனு ஆயில் பாத் எடுக்கும் நேரத்தில் உங்களுடைய நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஹெர்பல் டை ஆயிலை வீட்டில் செய்து பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்- 5
சின்ன வெங்காயம்- 5
அவுரி இலை- ஒரு கப்
மருதாணி இலை- அரை கப்
கரிசலாங்கன்னி- அரை கப்
வேப்பிலை- கால் கப்
செம்பருத்தி இலை- கால் கப்
கறிவேப்பிலை- கால் கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
ஆவாரம்பூ- ஒரு ஸ்பூன்
ரோஜா இதழ்- ஒரு ஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
செய்முறை:
முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அந்த ஜூனை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் பாதி அளவில் ஊற்ற வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த சாறினை சேர்க்க வேண்டும். சலசலப்பு அடங்கியதும் அதில் அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை ஆகியவற்றை அரைத்து கொதிக்கும் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
அதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் போன்றவற்றையும் மிக்சியில் போட்டு பொடியாகி இதில் சேர்க்க வேண்டும். அதன்புறகு மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சி எடுத்தால் அவ்வளவு தான் ஹெர்பல் டை ஆயில் தயார்.

- பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது.
ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு பிரச்சனையாகும். இதனால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை வரும். இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

நாளமில்லா சுரப்பி கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல் பருமன், வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.
கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல், கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி நிற்கும் ஆகிய நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.

அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.
முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.
- வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
- வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது.
- இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.
முடி உதிர்வு, வறட்சியான முடி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும், இதில் சில சமயங்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
தலை முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
அன்றாடம் நாம் உணவில் சேர்க்கப்படும் உணவுப்பொருளான வெங்காயம் முடி பராமரிப்புக்கு அற்புதமான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளை பார்க்கலாம்.

தலைமுடிக்கு வெங்காய ஹேர் மாஸ்க் உதவுமா?
வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான மூலப்பொருள் முடி இழைகளுக்கு ஊட்டமளித்து, பலப்படுத்துகிறது.
மேலும் இது ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தலைமுடிக்கு வெங்காயத்தைப் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.
வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதற்கு வெங்காய சாறு அல்லது வெங்காய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி இழைகளுக்கு மென்மையான பிரகாசத்தைத் தருகிறது. இதில் வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கான முறைகளைக் காணலாம்.

வெங்காயச் சாறு, கற்றாழை ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 தேக்கரண்டி அளவிலான கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30-40 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.
இதற்கு வெங்காயம் சேர்க்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

வெங்காயச் சாறு, தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:
தேங்காய் எண்ணெயுடன் வெங்காயச் சாறு சேர்க்கப்பட்ட ஹேர் மாஸ்க் முடியின் இழைகளை நீரேற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் 2 தேக்கரண்டி அளவிலான வெங்காயச் சாறு சேர்க்கலாம்.
இப்போது இந்த கலவையை முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கொண்டு தலைமுடியை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

வெங்காய சாறு, தேன் ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. எனவே இது முடி சேதம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.
இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான தேனுடன் அரை கப் புதிய வெங்காய சாற்றை சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.
இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். முடியில் இந்த கலவையை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவ வேண்டும். இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
இஞ்சி, வெங்காய சாறு ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க்கானது அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
இந்த கலவையைத் தயார் செய்ய இஞ்சி மற்றும் வெங்காயச் சாற்றை சம அளவு எடுத்து நன்கு கலக்கி தலைமுடிக்குத் தடவலாம்.
பின்னர் இதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவும் முன், சுமார் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.
நாள்தோறும் இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு முடியை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் இது போன்ற பல்வேறு வழிகளில் வெங்காய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
- இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.
- பயோட்டின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் சில வைட்டமின்கள் குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் குறைபாட்டை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.

வைட்டமின் டி
தலை முடி வேர்களை வலுப்படுத்துவதிலும், புதிய முடியை வளரச் செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் அமர்வது மற்றும் இதுதவிர மீன், முட்டை, பால், தயிர் போன்ற உணவுப்பொருட்களில் வைட்டமி டி அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் ஈ
வைட்டமி ஈ ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது முடியை ஃபிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. பாதாம், வெண்ணெய் மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.
வைட்டமின் சி
வைட்டமி சி தலைமுடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமிம் சி உள்ளது.

பயோட்டின்
பயோட்டின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. முட்டை, கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் பயோட்டி நிறைந்த உணவுகள் ஆகும்.
இரும்புச்சத்து
முடி வளர்ச்சிக்கு அவசியமான ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பசலைக் கீரை, பீட்ருட் மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
ஆனாலும் இந்த வைட்டமின்களை உணவு மூலம் பெறுவதை விட மருத்துவர் அளிக்கும் ஆலோசனையின் பேரில் மருந்துகள் மூலமும் வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுக்க செய்ய வேண்டியவை:
* ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
* நல்ல தூக்கம்
* மன அழுத்தத்தைக் குறைக்கவும்
* லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்
* தலைமுடியில் அதிக வெப்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

* தலைமுடியை சீவும்போது மெதுவாக சீவுங்கள்
* உங்கள் தலைமுடியை ஈரமாக விடாதீர்கள்