search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Halep"

    ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கார்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #SimonaHalep
    மாண்ட்ரியல்:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாலெப்பின் ஆதிக்கம் இருந்தது. முதல் செட்டை சற்று போராடி கைப்பற்றினாலும், இரண்டாவது  செட்டை எளிதாக வென்றார் சிமோனா. இறுதியில்  7-5 6-1 என்ற செட்கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனான கார்சியாவை ரோஜர்ஸ் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு முறை சிமோனா ஹாலெப் வீழ்த்தி உள்ளார்.



    இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பார்த்தியை ஹாலெப் எதிர்கொள்ள உள்ளார். இவர் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை நேர்செட்களில் வீழ்த்தியவர் ஆவார். எனவே, இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #RogersCup #SimonaHalep
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹாலெப், பிளிஸ்கோவா, முகுருசா, ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆடங்கள் நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ருமெனியா வீராங்கனை ஹாலெப் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா குரோஷியாவின் டொன்னா வெகிக்கை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.



    3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முகுருசா 7(7) - 6(0) நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். பெல்ஜியத்தை எலிசே மெர்டென்ஸ் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் சாங் ஷூய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.



    இன்னொரு ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்தனர். முன்னதாக முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் ஷரபோவா 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2½ மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மார்கோ செஷினாடோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 7 முறை சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்கர்ரை (போஸ்னியா) ஊதித்தள்ளினார்.

    இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தன்னை எதிர்த்த பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். 
    ×