search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hales"

    ‘360 டிகிரி’ என்ற அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடுகிறார். #ABDVilliers
    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் லீக் போட்டிகளில் விளையாடும் வகையில் அவருக்கு நேரம் கிடைத்தது. இதனால் முதன்முறையாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில் வங்காள தேச பிரீமியர் லீக் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரங்பூர் ரைடர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை விளாசும் திறமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர்.



    20 வயதாகும் சாம் குர்ரான் இங்கிலாந்து அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். கிரேக் ஓவர்டன் 3 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருவரும் இதுவரை விளையாடியது கிடையாது.
    இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 242 ரன்னில் படுதோல்வியடைந்தது வார்னே, மைக்கேல் கிளார்க்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவ் (92 பந்தில் 139), அலெக்ஸ் ஹேல்ஸ் (92 பந்தில் 147), மோர்கன் (30 பந்தில் 67), ஜேசன் ராய் (61 பந்தில் 82) ஆகியோரின் அதிரடியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 37 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 239 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 44 ரன்களும் அடித்தனர். மொயீன் அலி (3), அடில் ரஷித்தின் சுழலில் சிக்கி 242 ரன்னில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்ததால் முன்னாள் ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, மைக்கேல் கிளார்க் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
    ×