search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanuman temple"

    • இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது
    • இதில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி நடித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    கமல்ஹாசன் தேர்தல் பிரசசாரங்களில் ஈடுபட்டிருந்த போது, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மணிரத்னம்.படமாக்கி வந்தார்.




    இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக 'தக்லைப்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.



    இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிம்பு பற்றிய அறிமுக வீடியோவை படக்குழு நாளை  வெளியிட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
    • ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவட்டாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைப்பு மற்றும் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று காலை குழந்தைகள் நலனுக்காகவும், ஆன்மிகத்தில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளவும் ஆஞ்சநேய சனீஸ்வர ஹோமம் நடந்தது. ஆஞ்சநேய சாமி அறக்கட்டளை மற்றும் ஆஞ்சநேய சாமி கோவில் நிறுவனர் ஆஞ்சநேய சித்தர் ஹோமத்தை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, கவச மந்திரம் வழங்கப்பட்டது.

    மாலையில் திருவட்டார் சந்திப்பில் இருந்து பஞ்சவாத்தியம் முழங்க, முத்துக்குடைகளுடன் 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆஞ்சநேய சித்தர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 48-வது மடாதிபதி மூப்பில் சாமியார் ஸ்ரீபுஷ்பாஞ்சலி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை அகில இந்திய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீராமானந்தா சுவாமிகள் முன் சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாழும் முறை, வாழ்க்கையில் மேன்மையடைய செய்ய வேண்டியவை, கடவுள் பக்தியின் சிறப்பு ஆகியவை குறித்து சன்னியாசிகள் சிறப்புரையாற்றினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.
    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.

    தல வரலாறு:

    ‘ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்குமிடத்தைக் கண்டறிந்து வரத் தகுதியுடையவர் அனுமனே’ என்று முடிவு செய்தார் ராமர். அவர் அனு மனிடம், சீதையைக் கண்டறிவதற்காக, அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து, ராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதைச் சீதைக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தன் கணையாழியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

    சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த, சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும் ராமன் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார். ராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்து கொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

    ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாகக் கருதப்படும் இடத்தில், வசிஷ்ட முனிவர், அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இக்கோவிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் இருக்கும் கருவறையில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில், ராமன், தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளைச் சொல்வதை இடதுபுறம் காதைச் சாய்த்துக் கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டுமென்பதற்காக, இங்கிருந்து சிறிது தள்ளியிருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார்.

    இக்கோவில் வளாகத்தில், கணபதி, ஐயப்பன், துர்க்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராமர், லட்சுமணன், அனுமன் என்று மூன்று பேருக்குமான கோவிலாக இந்த ஆலயம் இருந்த போதிலும், இது ‘அனுமன் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல், ஒட்டப்பம், கதலிப்பழம், வெல்ல அவல், பனப்பாயசம், சாத்துசாதம் போன்றவைகளைப் படைத்தும், அனுமனுக்குரியதாகக் கருதப்படும் பல்வேறு மலர்களைச் சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    இங்குள்ள ராமசாமி கோவிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதே போன்று பாகவதசேவை வழிபாடும் செய்யப்படுகிறது. லட்சுமணசுவாமி சன்னிதியில் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் கோவில் நிறுவப்பட்ட நாளில் தந்திரி தட்சினா, கேளி, சிறுமேளம் எனும் பெயர்களிலான சிறப்பு வழி பாடுகள் செய்யப்படுகின்றன.

    அனுமனுக்கு அவல் நைவேத்தியம்

    மலையாள நாட்காட்டியின்படி, துலாம் (ஐப்பசி) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் அனுமனுக்கான பெரும்விழா மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இதே போன்று, மீனம் (பங்குனி) மாதம் அஸ்தம் நட்சத்திர நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் அமாவாசை நாள் ஆகியவற்றிலும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அவல் வழிபாடு :

    சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக, ராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில், இக்கோவிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி, கால் பொதி (25 நாழி), அரைப்பொதி (50 நாழி), ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனுமனுக்கு அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    சீதையைக் கண்டறியச் சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாண்டிக் குதித்ததை நினைவூட்டும் வகையில் கோவில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்தக் கல் திடலைத் தாண்டிக் குதித்தால், அவர்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்கு, ராமன் சீதையைக் கண்டறிந்து வருவதற்காகச் சீதையின் உருவ அடையாளங்களையும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லிய போது, தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியினை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர், மலப்புரம் நகரில்இருந்து 32 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திரூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    ×