என் மலர்
நீங்கள் தேடியது "Happy Mothers Day"
பிரபல மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், அன்னையா் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பம் மூலம் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். #HappyMothersDay #SudarsanPattnaik
புவனேஷ்வர்:
உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று அன்னையா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் தங்கள் தாய்க்கு அன்னையா் தின வாழ்த்துகள் தொிவித்து அவா்களிடம் ஆசிா்வாதம் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் அன்னையா் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.

இதே போன்று தனது மற்றொரு மணல் சிற்பத்தில் பிரதமா் நரேந்திர மோடி, அவரது தாயாரிடம் வாழ்த்து பெறுவது போல் சிற்பத்தை வடிவமைத்துள்ளாா். அவரது சிறபத்திற்கு பலரும் வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா். #HappyMothersDay #SudarsanPattnaik