search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik Patel"

    குஜராத் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் படேல் பா.ஜனதாவில் இணைந்தார்.
    அகமதாபாத்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அவர் அந்த கட்சியில் சேர்ந்தார்.

    முன்னதாக ஹர்திக் படேல் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன். ஒரு சிறிய சிப்பாயாக பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.



    பட்டேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்காக போராடிய ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    குஜராத் மாநிலத்தில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

    அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும் ஹர்திக் பட்டேல், ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #HardikPatel #joinCongress #RahulGandhi
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.



    இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு இன்று வந்த ஹர்திக் பட்டேல், இன்று காங்கிரசில் இணைந்தார். அவரை ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார். #HardikPatel #joinCongress #RahulGandhi
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் 12-ம் தேதி காங்கிரசில் இணைகிறார். #HardikPatel #joinCongress
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. 

    இந்நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HardikPatel #joinCongress 
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கைதாகி, சிறைசென்ற ஹர்திக் பட்டேல் தனது நீண்டநாள் தோழியை இன்று திருமணம் செய்து கொண்டார். #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சுமார் ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதி 17-7-2016 அன்று அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுதலை ஆகும் தினத்திலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் கடந்த ஆறுமாத காலமாக தாய்மண்ணை விட்டு பிரிந்திருந்த ஹர்திக் பட்டேல் 17-1-2017 அன்று குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்தார்.



    இந்நிலையில், தனது நீண்டநாள் தோழியான சட்டக்கல்லூரி மாணவி கின்ஜல் பரேக் என்பவருக்கும் ஹர்திக் பட்டேலுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம், சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் கின்ஜல் பரேக் - ஹர்திக் பட்டேல் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

    முன்னதாக, இதே மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டம், உஞ்சா பகுதியில் உள்ள கடவா பட்டேல் இனத்தவர்களின் சிறப்புக்குரிய வழிப்பாட்டுத்தலத்தில் இந்த திருமணம் நடைபெற ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், மெஹ்சானா மாவட்டத்துக்குள் ஹர்திக் பட்டேல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் , திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.  #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் தனது காதலியை திருமணம் செய்கிறார். #HardikPatel #Kinjal
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் பட்டேல் (வயது 25). இவர் ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

    ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் தனது காதலி கிஞ்சாலை திருமணம் செய்து கொள்கிறார்.

    இவர்களது காதல் திருமணம் வைதீக முறைப்படி அங்குள்ள சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    எளிய முறையில் நடக்கிற மண விழாவில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன.  #HardikPatel #Kinjal
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேல் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #HardikPatel #Loksabhapolls #Varanasi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படேல் சமூக தலைவராக உருவெடுத்து இருக்கும் இளைஞர் ஹர்த்திக் படேல்.

    இவர் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தி குஜராத்தையே ஸ்தம்பிக்க வைத்தார். இதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

    இட ஒதுக்கீடு பிரச்சனையில் தொடர்ந்து பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குஜராத் சட்டசபை தேர்தலில் அவர் பிரசாரம் செய்யாவிட்டாலும் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.


    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுயேட்சை வேட்பாளராக நிறுத்தி எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது ஹர்த்திக் படேல் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடனேயே அவர் மக்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ஹர்த்திக் படேலிடம் கேட்ட போது, “இப்போதைக்கு வாரணாசியில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை” என்றார். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஹர்த்திக் படேல் தேர்தலில் போட்டியிடுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆதரவைப் பொறுத்து அவர் முடிவு எடுப்பார், ஹர்த்திக் படேல் வாரணாசியில் போட்டியிட்டால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றனர். #HardikPatel #Loksabhapolls #Varanasi
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் என படேல் இன தலைவரான ஹர்திக் படேல் கூறியுள்ளார். #HardikPatel #RajasthanElection #BJP
    உதய்பூர்:

    படேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதை உணர முடிந்தது. இதனால் 7-ந் தேதி நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும். இப்போது உள்ள நிலையில் அதுதான் பாரதீய ஜனதாவுக்கு சரியான இடம் தான். மக்கள் அந்த கட்சிக்கு எதிராக ஓட்டு போடும் மனநிலையில் உள்ளனர்.



    குறிப்பாக வேலை வாய்ப்பை உருவாக்காத பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன். ஆனால் எனது அமைப்பான கிஷான் கிராந்தி சேனா சார்பில் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை விளக்குவதற்கு மக்களை சந்திப்பேன்’ என்றார். #HardikPatel #RajasthanElection #BJP
    பட்டேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு கேட்டு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேல் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். #HardikPatel #19days
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    அவரது போராட்டம் 13-வது நாளை நெருங்கிய நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அவர் இன்று இளநீர் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.



    இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #HardikPatel #19days
    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota
    குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #HardikPatel #Gujarat
    அகமதாபாத்:

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    அவரது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இத்தனை நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஹர்திக் பட்டேல் உடல்நிலை நேற்றே மோசமடைந்தது. இதனால் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே, அவருடன் அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக திகழ்கிறார். இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார். பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டம் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. #HardikPatel #Gujarat
    ×