என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haridwar"

    • இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கங்கை நதி நீர் 'ஏ' முதல் 'ஈ' வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
    • ஹரித்துவார் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதன்படி நதி நீர் 'ஏ'(A) முதல் 'ஈ'(E) வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

    ஏ என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.

    அதே சமயம் ஈ என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி' வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×