என் மலர்
நீங்கள் தேடியது "harish uthaman"
- நடிகர் விஜய் தற்போது ’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரிஷ் உத்தமன் பதிவு
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்தையும் 'விக்ரம்' திரைப்படத்தையும் இணைக்கும் வகையில் மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் 'நல்லா இருக்கும் இல்லையா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 'பயமறியா பிரம்மை' திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
- படத்தின் டிரைலரை நேற்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. . படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகியது.
இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. டிரைலர் காட்சிகள் முழுக்கம் முழுக்க ஒரு மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு கைதி ஜெயிலில் அமர்ந்து அவன் இந்த நிலைக்கு வந்த காரணத்தை கூறுகிறான்.
படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
