என் மலர்
நீங்கள் தேடியது "Havana"
மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். #PresidentKovind
ஹவானா:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், கியூபா அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #RamnathKovind #Havana