என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hc stops
நீங்கள் தேடியது "HC Stops"
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை செய்யும் குழுக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க கோர்ட் தடை விதித்திருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். #BJP #MamataBanerjee
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.
இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த குழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.
துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
துர்கா பூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுவதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது துர்கா பூஜைக்கு அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
செவ்வாய்க்கிழமை வரை இது தொடர்பாக எந்த வித அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில பா.ஜ.க.வும் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளது. மம்தாபானர்ஜி வேண்டுமென்றே இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்கு இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார். அவருக்கு கோர்ட்டு தக்க பாடம் அளித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். #BJP #MamataBanerjee
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X