search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Recieps"

    நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு கோதுமை களி. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இன்று இந்த களியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.



    செய்முறை:

    கோதுமை மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் 2-1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி நன்றாக வேக விடவும்.

    கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    சூப்பரான கோதுமை களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய்த்துருவல் - தேவையான அளவு
    நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.

    மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.

    பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.

    தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 2 கப்
    வெந்தயக்கீரை - 1 கட்டு,
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

    வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த வெந்தயக்கீரை இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று கோளாறுகளை குணமாக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...

    அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான இஞ்சி துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சைப் பயறு - 1 கப்
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
    வெங்காயம் - 1 (விரும்பினால்)
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம்

    தாளிக்க:

    எண்ணெய், சீரகம்.

    காய்கறி :

    வெங்காயம்,
    கேரட்,
    குடைமிளகாய்,
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லித் தழை.



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

    இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.

    மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.

    மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.

    சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.

    திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.

    அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் மதிய உணவாக வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாப்பிடலாம். இன்று இந்த உணவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    கோஸ் - சிறிய துண்டு
    குடை மிளகாய் - பாதி
    தக்காளி - 1
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவையான அளவு
    சீரகத்தூள் - தேவையான அளவு
    பிளாக் சால்ட் - சிறிதளவு.



    செய்முறை :

    அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறிய அவலை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சி, துருவிய கேரட், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கவும்.  

    சூப்பரான வெஜிடபிள் அவல் மிக்ஸ் ரெடி.

    பலன்கள்:  சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×