search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy police security"

    • பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல், கோவையில் பலத்த பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடைபெற்றது. கோவை சவானந்தா காலனி முதல் அம்ருதா வித்யாலயா பள்ளி வரை பேரணி நடைபெறுகிறது.

    நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றுள்ளனர். விஜயதசமியையொட்டி 'பதசஞ்சலனம்' என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துகிறது.

    தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தென்காசியில் சுமார் 3 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல்.
    • பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை. நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

    அதன்படி, பௌத்த முறைப்படி இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.

    இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    அடக்கம் செய்யும் இடத்தில் ஆவடி கூடுதல் ஆணையர் தலைமையில் 300 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது.
    • இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலையில் குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது.

    இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், அருள், வசந்தராஜ், சிவசுப்பு, சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டப்பிடாரத்தை சுற்றியுள்ள கவர்னகிரி செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல் நார்சம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாடுவிடும் விழா நடந்தது. இதில் பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஷாரப் (வயது 19) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

    அந்த நேரத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த முஷரப் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல் வீச்சில் சப் கலெக்டர் மற்றும் போலீசார் வாகனங்கள் தாக்கப்பட்டன.

    இறந்த முஷரப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு உதவி கலெக்டர் பானு தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று வாலிபரின் உடன் பெரிய கம்மியம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேவராஜி எம்எல்ஏ இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் வாலிபர் உடலை இடுகாடு வரை தன் தோளில் சுமந்து சென்றார்.நகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாலிபர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×