search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு முட்டியதில் இறந்த வாலிபரின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
    X

    ஜோலார்பேட்டை அருகே மாடு முட்டியதில் இறந்த வாலிபரின் உடல் எம்.எல்.ஏ. தோளில் சுமந்து கொண்டு அடக்கம் செய்தார்.

    மாடு முட்டியதில் இறந்த வாலிபரின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்

    • எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல் நார்சம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாடுவிடும் விழா நடந்தது. இதில் பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஷாரப் (வயது 19) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

    அந்த நேரத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த முஷரப் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல் வீச்சில் சப் கலெக்டர் மற்றும் போலீசார் வாகனங்கள் தாக்கப்பட்டன.

    இறந்த முஷரப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு உதவி கலெக்டர் பானு தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று வாலிபரின் உடன் பெரிய கம்மியம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேவராஜி எம்எல்ஏ இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் வாலிபர் உடலை இடுகாடு வரை தன் தோளில் சுமந்து சென்றார்.நகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாலிபர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×