search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helipads"

    மேற்கு வங்கத்தில் இதுவரை 27 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #HelicopterServices #Mamata
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.

    சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஹெலிகாப்டர் சேவை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.



    ‘இன்று சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நாள். பங்களாவில் (மேற்கு வங்கம்) 2018 மே மாதம் வரை 27 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து மால்டா, பாலர்காட், டிகா, கங்காசாகர் போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டர் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என மம்தா டுவிட் செய்துள்ளார். #HelicopterServices #Mamata
    ×