search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helpline number"

    • எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு.
    • புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவிப்பு.

    பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு புகார் எண்ணை அறிவித்துள்ளது.

    அதன்படி, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 6360938947 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது.

    கோரமங்களா பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில், ரேவண்ணாவை ஆஜர்படுத்திய நிலையில், போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும்.
    • வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இதற்கிடையே, முதலமைச்சர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," சென்னையில் மலை நீர் வடிந்து வருவதாக" தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.

    விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×