search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helsinki Meeting"

    ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பின்லாந்து வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு அதிபர் சவுலி நீனிஸ்டோவை சந்தித்து உணவருந்தினார். #TrumpPutinmeeting #HelsinkiMeeting
    ஹெல்சின்கி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கு பின்னர், உலகம் உற்றுநோக்கும் மற்றொரு நிகழ்வாக டிரம்ப் - புதின் சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ரஷியா இடையே இன்னும் பல விஷயங்களில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் - புதின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்னும் சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்கான, ஹெல்சின்கி வந்துள்ள டிரம்ப், பின்லாந்து அதிபர் சவுலி நீனிஸ்டோவை இன்று சந்தித்தார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது சவுலியுடன் டிரம்ப் ஒன்றாக காலை உணவு அருந்தினார்.

    ஒன்றுபட்ட சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்த இடமான பின்லாந்தில் தற்போது ரஷியா - அமெரிக்கா சந்திப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×