என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "High Knee"
- உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும்.
- கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். ஆனால் அத்தகைய பயிற்சிமுறைகளை எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாதது.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், உடற்பயிற்சிகளை சரியாக மேற்கொள்ள முடியாதவர்கள் எளிமையான பயிற்சி முறைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்றவையாக `ஜம்பிங் பயிற்சிகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் என்னென்ன பயிற்சிகள் எடை குறைப்புக்கு சிறந்த பலனை தரும் என்று பார்ப்போம். அதே போல உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற பயிற்சிகள் எவை என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.
ஸ்கிப்பிங்:
உடல் பருமனை குறைப்பதற்கு எளிமையான பயிற்சியை தேடுபவர்களுக்கு `ஸ்கிப்பிங்' பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். இதனை பயிற்சியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் விளையாட்டாகவும் மேற்கொள்ளலாம். அவர்களுக்கும் ஸ்கிப்பிங் கயிற்றை கொடுத்து துள்ளி குதிக்கச் செய்து உற்சாகமாக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி உதவும். இதனை தவறாமல் செய்து வந்தால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்களுக்கு இந்த பயிற்சி உதவும். உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம்.
ஜம்பிங் ஜாக்ஸ்:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது நல்ல பலனை தரும். இந்த பயிற்சியும் எளிமையானதுதான். முதலில் கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்ததும் குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி துள்ளிக் குதிக்கும்போது கால் தரைக்கு வரும் சமயத்தில் மட்டும் வேகத்தை குறைக்க வேண்டும். அது கால்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும். இந்த பயிற்சி செய்யும்போது பொருத்தமான காலணிகள் அணிவதும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி செய்வது நல்லது. பின்பு சுயமாகவே பயிற்சியை தொடரலாம்.
பர்பீஸ் பயிற்சி:
இதுவும் கூட எளிமையான பயிற்சி முறைதான். சமதள தரையில் நேர் நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை தரையில் ஊன்றியபடி இடுப்பு பகுதி வரை உடலை நிமிர்த்த வேண்டும். பின்பு கைகளை நன்றாக அழுத்தி கால்களுக்கும் அழுத்தம் கொடுத்து குதித்த வாக்கில் எழுந்து நிற்க வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 50 முறை செய்து வரலாம். அதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் எடையும் குறைய தொடங்கிவிடும்.
முழங்கால் பயிற்சி:
`ஹை க்னீ' என்று அழைக்கப்படும் இந்த முழங்கால் பயிற்சியையும் எளிமையாகவே செய்து விடலாம். நேர் நிலையில் நின்றபடி இரு கைகளையும் இடுப்பு பகுதியை ஒட்டி வைத்தபடி நேராக நீட்ட வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தொடைப்பகுதி மேல் நோக்கி வந்து கைகளை தொட்டுவிட்டு செல்லுமாறு பயிற்சி முறை அமைய வேண்டும்.
கைகளை மேலும், கீழும் அசைக்காமல் நேர் நிலையில் வைத்தபடியே தொடைப்பகுதியை தொட்டுச் செல்வதுதான் சரியான பயிற்சி முறை. அதனை கவனமாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தொடைப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தியும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது பயிற்சி செய்து வருவது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்