search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high rate"

    திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உணவுப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #TheatresFoodRate
    சென்னை:

    திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொண்டதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 72 கேண்டீன் உரிமையாளர்கள் மீதும், 38 தியேட்டர்கள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோல், சாலையோர கடைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. #TheatresFoodRate
    ×