search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hina Khan"

    • கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும்.
    • உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும்.

    நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஹினா கான் மார்பக புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ ஒன்று வைரலானது.

    இந்நிலையில், நடிகை ஹினா கான் தனது மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு இடையே மியூகோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அதற்கான தீர்வு அளிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அவர் தனது பதிவில், "கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும். இருப்பினும் அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும். நீங்கள் சாப்பிட முடியாதபோது மிகவும் கடினமாக உள்ளது. இது எனக்கு பெரிதும் உதவும்" என கூறியுள்ளார். 

    • உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
    • சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.

    இந்தி நடிகையான ஹினா கான் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். நோயில் இருந்து விரைவில் மீள்வேன் என்றும், இந்த கஷ்ட நேரத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் வாழ்த்தினர்.

    இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஹினா கான் குணம் அடைய வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறும்போது, "நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைய உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இரு. ஹினாகான் ஒரு போராளி'' என்று கூறியுள்ளார்.


    இதையடுத்து சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை. வாழ்க்கையில் வரும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.

    உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

    நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
    • அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.

    இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.

    அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×