என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi film"

    • அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
    • அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.

    'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில்  அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.

    இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்               

        உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன்  திரைப்படம் 'கல்நாயக்' .  முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் .

    இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் 'சோலி கே பீச்சாய் க்யா ஹை' என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 'கல்நாயக் 2' படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.


    இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ‌ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார்.

    ஆனால், ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக செய்ததுபோல இந்தப் படத்தில் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தன் நடிப்பின் மூலமாகவே வயது முதிர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று கீர்த்தி முடிவெடுத்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh

    ×