search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HMD 105"

    • இந்தியாவில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள்.
    • வயர்லெஸ் எஃப்.எம்., டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹெச்.எம்.டி. (HMD) குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய பீச்சர் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக நோக்கியா 3210 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்களில் ஒரே மாதிரியான டிசைன், டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி, MP3 பிளேயர், வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களும் அதிகபட்சம் 9 மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஹெச்.எம்.டி. 110 மாடலில் ரியர் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 18 நாட்களுக்கு ஸ்டான்ட் பை வழங்குகிறது. இவற்றில் இண்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் செய்யும் வசதி உள்ளது.

    ஹெச்.எம்.டி. 105 மாடல்- பிளாக், பர்பில் மற்றும் பர்பில் என மூன்று நிறங்களிலும், ஹெச்.எம்.டி. 110 மாடல் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. 105 விலை ரூ. 999 என்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல் விலை ரூ. 1199 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ×