search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey match"

    • மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.
    • சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சென்ற மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 வயது உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கான மாநில குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்ட அணிகளும் மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அணியும் ஆக 39 அணிகள் பங்கு பெற உள்ளது.

    இந்த மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இச்சாதனை புரிந்த புரிந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர்.முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள்.முரளி, .மார்கண்டன், .சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர்.பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் .இராமகிருஷ்ணன், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் .அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள்.

    துளசிரங்கன், .வரதராஜன், பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.

    நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோத உள்ள நிலையில் நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவுடன் மோத வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். கடைசி இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்படும்.

    மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.

    கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது.

    நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    ×