search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hodeida"

    உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளன. #YemenConflict #YemenClashes
    சனா:

    ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு  தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.

    ஹொடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



    கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.

    உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது. #YemenConflict #YemenClashes

    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. #Yemen #Hodeida #Clashes
    ஹொதய்தா:

    ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க அதிபர் ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

    இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருகின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

    அங்கு தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக தெரிகிறது. 
    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 61 பேர் உயிரிழந்தனர். #Yemen #Hodeida #Clashes
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.



    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஹொடைடா மாகாணத்தில் நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் ஹவுத்தி போராளிகளில் 43 பேரும் முன்னாள் அதிபர் அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் 18 பேரும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #Yemen #Hodeida #Clashes

    ×