search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home made recipes"

    தோசை, இட்லி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தொக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - ஒன்று
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

    கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.

    கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபி கார்ன் வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பேபிகார்ன் - 500 கிராம்,
    மிளகாய்த் தூள் - 10 கிராம்,
    மல்லித்தூள் - 10 கிராம்,
    அரிசி மாவு - 10 கிராம்,
    இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்,
    எலுமிச்சைச் சாறு - 1 பழம்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பேபி கார்னை கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்… பேபி கார்ன் வறுவல் ரெடி.

    கூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த பாஸ்தா - 200 கிராம்
    பன்னீர் - 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கேரட் - 1
    இஞ்சி - அரை டீஸ்பூன்
    பூண்டு - அரை டீஸ்பூன்
    டொமேட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும்.

    இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும்.

    வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும்போது கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி குழம்பு சூப்பராக இருக்கும். இன்று வாத்துக்கறி குழப்பை வேலூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாத்துக்கறி - 1 கிலோ
    சின்ன வெங்காயம் - அரை கிலோ
    தக்காளி - 4
    தேங்காய் துருவல் - 1 கப்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 4
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது, பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

    வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூடான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×