search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home search education"

    • 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர்
    • பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர்.

    இன்று முதல் நாளில், பள்ளிக் கல்வித்துறையின் அமைப்பு அதன் செயல்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    குறிப்பாக கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது, என்னென்ன நிகழ்ச்சிகள் அங்கு தயாரிக்கப்படுகிறது. எவ்வாறு படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது குறித்து அவர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அதே போல் பாடப்புத்தகங்கள் வண்ணமயமாக எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாளை பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

    புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், தகைசால் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

    இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் இருந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து தெலுங்கானாவில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.
    • தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டறிக்கைகள் மூலமாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டதின் விளைவாக மாவட்டம் முழுவதும் 3737 தன்னார்வலர்கள் இணைய வழியில் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். இவர்களில் மொத்தம் 2108 தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு உளவியல், கணினி வழி தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு மூலம் இறுதியாக 1814 தன்னார்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுனர் குழுவால் முறையான பயிற்சி வழங்கப்பட்டு, அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பணியமர்த்தப்பட்டு நாளது வரையில் 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.

    மேலும், மாணவர்கள் வகுப்பு அடிப்படையில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னார்வலர்களாலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உயர் தொடக்க தன்னார்வலர்களாலும் மையம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக கள அளவில் செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிலும் தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தினசரி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு ஒன்றியங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலையில் 7652 மாணவர்களும், உயர் தொடக்க நிலையில் 5013 மாணவர்களும் என மொத்தம் 12,665 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்காலிக காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தகுதி அடிப்படை யில் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியராகவும் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தற்காலிக காலிப்பணியிடங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, குன்னூர் வட்டம் சில்வர் டேல் பகுதியிலுள்ள சி.எம்.எஸ் மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர் காளியம்மாளின் செயல்பாடுகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தன்னார்வலர்களுடன் முதல்-அமைச்சர் தொலை பேசியில் கலந்துரையாடி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பா டுகளை கேட்டறிந்தார்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்பு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களும், மாவட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளாரும் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதற்கான பிரத்யேக இல்லம் தேடி கல்வி திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி செயலி மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு தங்களது செல்போன் செயலி வழியாக பதிவு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மகத்தான திட்ட மானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அடிப்படை திறனை சிறப்பாக பெறும் வகையில் இக்கல்வியாண்டும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது.
    • இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.

    பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

    • இல்லம் தேடி கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியை அமைத்திருந்தனர். இதனை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகளை கொண்டு இந்த கல்வியாண்டு முழுவதும் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சியை அமைத்திருந்தார்.

    இதை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
    • இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி பயிற்சி கிருஷ்ணன் கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பர்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செல்வம், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.

    திருப்பூர்:

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி குறுவளமைய அளவில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்துக்கு, நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நாளை 15-ந் தேதி பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17ந் தேதி அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுனருக்கு நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வழங்கப்படும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

    பின்னர், ரெங்கப்பநாய க்கன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.49 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், படந்தாலில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×