search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homophobia"

    இயற்கைக்கு முரணான குற்றங்கள் யாராவது ஒருவர் பாலியல் இன்பத்துக்காக தானாக முன்வந்து இயற்கை நெறிக்கு மாறாக ஆணையோ பெண்ணையோ புணர்ந்தால், தண்டனை விதிக்கப்படலாம்.
    இயற்கைக்கு முரணான குற்றங்கள் யாராவது ஒருவர் பாலியல் இன்பத்துக்காக தானாக முன்வந்து இயற்கை நெறிக்கு மாறாக ஆணையோ பெண்ணையோ அல்லது விலங்கையோ புணர்ந்தால், பத்தாண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். அபராதம் தனி என்று இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவு கூறுகிறது..

    இது தான்அந்தச் சட்டம். இதைத் தான் கடந்த செப்டம்பர் 6-ந்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘செல்லாது செல்லாது’ என தீர்ப்பு சொல்லி, ரத்து செய்துவிட்டது. இது ஏதோ, இன்று உச்ச நீதிமன்றம் உருவாக்கிவிட்ட புரட்சி அல்ல. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இதே உத்தரவை பிறப்பித்துவிட்டது.

    அன்று வெகுண்டு எழுந்த உச்ச நீதிமன்றம் இதே உச்ச நீதிமன்றம் தான் ஓரினச்சேர்க்கையை ஒழித்துக்கட்டியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவையும் 2013-ல் தூக்கி எறிந்தது. நாடாளுமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னது. அங்கு சசி தரூர், ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக ஒரு நபர் மசோதா கொண்டுவந்தார். அவருக்கு பின்னால் யாரும் நிற்கவில்லை. எனவே, அதை மக்களவை நிராகரித்தது.

    இப்படியே போய்க்கொண்டு இருந்த கதை 2017-ல் ஒரு திருப்பத்தை சந்தித்தது. அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என வேறொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சொல்லி வைத்தது. இதற்காகவே காத்திருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுடைய அந்தரங்கத்துக்காக அதாவது அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்க, வந்துவிட்டது

    இறுதியோ இறுதித் தீர்ப்பு. இதில் விசேஷம், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த குரலில் தீர்ப்பு அளித்திருப்பது. யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. இனி ஆண்கள் ஆண்களோடு இருக்கலாம்; பெண்கள் பெண்களோடு இருக்கலாம். சட்டம், காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கின்றனர், இன்னும் வெள்ளைக்காரர்கள் காலத்து கருப்புக்கோட்டை கூட மாற்றாத நீதிபதிகள். ஓர் ஆணும் ஆணும் தனி அறையில் உல்லாசமாக இருப்பது, பிற பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ எந்தத் தீங்கையும் இழைக்காது என்பதால், அந்த ஆண்களின் தனிப்பட்ட விருப்புரிமை மதிக்கப்பட வேண்டும் என்பது தீர்ப்பின் சாராம்சம்.

    இதே இந்திய தண்டனைச் சட்டத்தின் 494-வது பிரிவு, பலதார மணத்தை தடை செய்கிறது. ஏன் தடை செய்ய வேண்டும்? நான்கு பெண்கள் சம்மதித்தால், நான்பாட்டுக்கு குடித்தனம் நடத்திவிட்டு போகிறேன். இந்தச் சட்டத்துக்கு என்ன வந்தது? அப்புறம் ஏன், கணவனோ மனைவியோ உயிரோடு இருக்கும்போது, இன்னொரு திருமணம் செய்து கொண்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என மிரட்டுகிறது? காலத்துக்கேற்ப மா(ற்)றிக்கொள்ள வேண்டியது தானே அந்தச் சட்டமும் நீக்கப்படுமா? தனி மனித சுதந்திரத்தைப் பொறுத்தவரை, சமூகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் சுப்ரீம் கோர்ட்டின் சீரிய கருத்தே.



    சமூக ஒழுக்கம் என்பது, ஒற்றை மனிதனின் உரிமையில் கூட தலையிட முடியாது என்பது தலைமை நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி கன்வில்கரின் வரிகள். சிறப்பு! அப்புறம் ஏன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்கள் மது குடிப்பதை சட்ட விரோதம் என அறிவித்துள்ளன? தமிழ்நாட்டில் ஆளாளுக்கு மதுவிலக்கு கொண்டு வருவோம் என அச்சுறுத்துகிறார்களே; முதல் கையெழுத்து போடுவோம் என மிரட்டுகிறார்களே; நீதிமன்றங்கள் இதை தட்டிக்கேட்க கூடாதா? நான் குடித்துவிட்டு குப்புறக் கிடப்பது, எந்த தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதாகும்?

    கணவன்,மனைவி இருக்கும்போது இன்னொரு திருமணம் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. சரி, கணவன்,மனைவி இருக்கும் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றமா? இல்லையா? இந்த இடத்தில் யாருடைய தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது?

    விபசாரம், தனி மனித உரிமை பட்டியலில் இல்லையா? ஏன் இத்தனை வழக்குகள்? எத்தனை நடிகைகளின் வாழ்க்கை போனது, இத்தகைய வழக்குகளால்! யார் பொறுப்பு? கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கையைக் காட்டி அழைத்தார் என்றெல்லாம் எழுதினார்களே, இதை விட அந்தரங்க உரிமை மீறல் வேறென்ன இருக்க முடியும்? உலகத்தின் எந்த மூலையிலும் மது இல்லாமல் இல்லை;

    ஆனால், தமிழகத்தில் அதற்கான தடையை நீக்கிவிட்டு, கடையைத் திறந்துவிட்டதன் பலனை, யாராவது மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியுமா? அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, தெருவெங்கும் நல்ல சாராயத்தை ஓட விட்டது தான் தீர்வா? முன்பெல்லாம் விஷச்சாராயம் குடித்து, ஆண்டுக்கு பத்து பதினைந்து பேர் தான் இறந்து கொண்டிருந்தார்கள். இன்று, நாட்டிலேயே அதிகம் சாலை விபத்து நடக்கும் மாநிலம் தமிழகம்.

    அதற்கு காரணம் தெரிந்தது தான்; அதனால் தானே போராடினார்கள்.அப்படியே கண்டும் காணாமல் விட வேண்டியது தானே. சட்டமாக்கி, அதைச் சாதகமாக்கி ஏன் அவிழ்த்துவிட வேண்டும்? இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் எத்தனை லட்சம் பேர் சிறையில் வாடினார்கள்? யார் இதுவரைக்கும் தண்டிக்கப்பட்டது? ஒருவரும் இல்லையே.. அப்புறமென்ன? எனவே இது போன்ற பின் விளைவுகளை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அழகிய சிங்கன்

    ஓரினச்சேர்க்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிம் பொதுமன்னிப்பு அடிப்படையில் 15-ம் தேதி விடுதலையாகிறார். #MalaysianleaderAnwarrelease
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், மன்னர் அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் 15-ம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார். #MalaysianleaderAnwarrelease
    ×