search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HONOR 20 Pro"

    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன்களில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஆல்-வியூ டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், டூயல் என்.பி.யு. மற்றும் ஜி.பி.யு. டர்போ 3.0 வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிராஃபீன் கூலிங் ஷீட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 27 சதவிகிதம் வரை குறைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. 1/2" சோனி IMX586 சென்சார் மற்றும் 4 இன் 1 லைட் ஃபியூஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் f/1.4 அப்ரேச்சர் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான f/1.8 லென்சை விட 50 சதவிகிதம் அதிகளவு வெளிச்சத்தை உள்வாங்கி 204800 ஐ.எஸ்.ஒ. வழங்கும்.



    ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4-ஆக்சிஸ் OIS வழங்கப்பட்டுள்ளது. இது 3x வரை லாஸ்-லெஸ் சூம், 5x ஹைப்ரிட் சூம் மற்றும் 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் OIS வழங்கப்படவில்லை. இத்துடன் 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஹாலோகிராஃபிக் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ மாடலில் 3D வளைந்த கிளாஸ் பேக் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ஸ்மார்ட்போன் 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. இவற்றுடன் 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.26 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ ஆல்-வியூ டிஸ்ப்ளே, 412 PPI
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 MHz ARM மாலி-G76MP10 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி (ஹானர் 20) 
    - 8 ஜி.பி. ரேம், 285 ஜி.பி. மெமரி (ஹானர் 20 ப்ரோ)
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் மேஜிக் யு.ஐ. 2.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஹானர் 20 ப்ரோ: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.4, 4-ஆக்சிஸ் OIS, EIS, PDAF
    - 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4,  4-ஆக்சிஸ் OIS
    - 2 எம்.பி. கேமரா f/2.4
    - ஹானர் 20: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.8, AIS
    - 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 3D போர்டிரெயிட் லைட்டிங்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, விர்ச்சுவல் 9.1 சடரவுண்ட் சவுண்ட், டூயல் மைக்ரோபோன், ஹூவாய் கிரின் 6.0
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - ஹானற் 20: 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - ஹானர் 20 ப்ரோ: 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சஃபையர் புளு மற்றும் ஐஸ்லேண்டிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.38,784) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானற் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.46,550) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
    ×