search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honor V20"

    ஹூவாய் நிறுவனம் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் வி20 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. #HonorV20 #smartphone



    ஹூவாய் ஹானர் பிரான்டு வி20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய வி20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.

    கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். வசதி கொண்டுள்ளது. 



    இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.

    கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் வி20 சிறப்பம்சங்கள்

    - 6.4 இன்ச் 1080x2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - மாலி-G76MP10 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
    - TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்.பி. செ்ஃபி கேமரா, f/2.0
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் வி20 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,428) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் மொஷினோ (MOSCHINO) எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ×