என் மலர்
நீங்கள் தேடியது "Hoochtragedy"
அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் விஷச் சாராயம் குடித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களில் பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Hoochtragedy #Assamteaestate #AssamHoochtragedy
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோல்ஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலியானவர்களில் பெண் தொழிலாளிகள் அதிகம் என தெரியவந்த நிலையில் இப்பகுதிக்குட்பட்ட கும்ட்டாய் சட்டசபை உறுப்பினர் மிருனாள் சைக்கியா சம்பவம் நடந்த இடத்துக்கு இன்று சென்றார். கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை அவர் வலியுறுத்தினார். #Hoochtragedy #Assamteaestate #AssamHoochtragedy