search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hossein Khamenei"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமர்ஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார்
    • அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது

    ஈரான் அரசியல் புள்ளி 

    ஈரான் அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதத் தலைவர் அயத்துல்லா காமேனி -இன் ஆலோசகராகவும் இருப்பவர் அலி ஷாம்கானி [Ali Shamkhani]. ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலான Supreme National Security Council (SNSC) இன் தலைவராகவும் சுமார் 10 ஆண்டுகளாக அலி ஷாம்கானி இருந்துள்ளார். தற்போது அயத்துல்லா காமேனியின் ஆலோசகராக ஈரான் அரசியலிலும் ராணுவத்திலும் பலம் கொண்டவராக அலி ஷாம்கானி திகழ்ந்து வருகிறார்.

     

    ஹொசைனின் எண்ணெய் சாம்ராஜ்யம் 

    இவ்வாறாக அரசியலில் தனது இருப்பை நிலைநாட்டிவரும் அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி Hossein Shamkhan சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமராஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார். ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல ஈரான் மீது எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் ஹொசைன் ஷாம்கானி சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாக புளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹொசைன் ஷாம்கானியின் இந்த வளர்ச்சி ஈரான் அரசில் அவரது தந்தையின் அரசியல் தொடர்புகளே காரணம் என்கிறது அந்த அறிக்கை.

     

     

    ஹெக்டார் என்கிற ஹொசைன் ஷாம்கானி

    அந்த அறிக்கைப்படி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் உள்ள கார்ப்பரேட் டவரில் மிலாவோஸ் Milavous Group Ltd, என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.ஆரம்பித்து சில மாதங்களிலேயே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்கிற்கு கிடைத்துள்ள தகவலின்படி வியாபார வட்டாரங்களில் அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பில்லியன் கணக்கில் இந்த நிறுவனத்தின் வருவாய் எட்டியுள்ளது.

     

     நெட்வொர்க் 

    ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தக தொடர்பு நெட்வொர்க் ஆனது ஈரான் நாட்டை சேர்ந்த எண்ணெய் வர்த்தக நெட்வொர்க்களிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தடைகளை சட்டப்பூர்வமாக உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களுடனான பார்ட்னர்ஷிப் மூலமும் , ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் செயல்பாடு இல்லாத நிறுவனங்களை உருவாக்கியும் தனது சர்வதேச வர்த்தக ஆதிக்கத்தை ஹொசைன் ஷாம்கானி நிறுவியுள்ளார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஹொசைன் ஷாம்கானி மீதும் அவரது வர்த்தக நகர்வுகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தாலும், 60 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்டு பெரிய அளவில் இயங்கி வரும் அவரது நெட்வொர்க்கை முழுதாக செயலிழக்க செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது

     

    அமெரிக்காவின் தேள் 

    ஹெக்டார் அதாவது ஹொசைன் ஷாம்கானியின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் மிலாவோஸ் நிறுவனம் சீனாவின் சினோபெக், செவ்ரான்,BP உள்ளிட்ட பெரு வணிக கொள்முதல் நிறுவனங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் சட்டபூர்வமாக நடப்பதால் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருப்பதால், ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தகத்தில் கை வைப்பது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையை  உயர்த்தும். அது அமெரிக்காவில் வர இருக்கும் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா தேள் கொட்டினாலும் பரவா இல்லை என்று  மவுனமாக இருந்து வருகிறது. 

    ×