என் மலர்
நீங்கள் தேடியது "hrithik roshan"
- க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது.
- க்ரிஷ் 3 திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்துள்ளது
க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ரசித்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் பல சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு அதற்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களான க்ரிஷ் 2, க்ரிஷ் 3 வெளியாகி வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
இந்நிலையில் க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிருஷ் 4 பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் க்ரிஷ் 4 பாகத்தை ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளது எனவும். படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஆதித்யா சோப்ரா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக செயல்படவுள்ளனர். இப்படம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.
- இருவரும் பொது நிகழ்ச்சியிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபகாலமாக இவர் பாடகியும் நடிகையுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.

ஹிருத்திக் ரோஷன் - ஷபா ஆசாத்
இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனும் ஷபா ஆசாத்தும் மும்பையில் மூன்று மாடிகள் கொண்ட ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற முடிவு செய்துள்ளதாகவும் இந்த வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

ஹிருத்திக் ரோஷன் - ஷபா ஆசாத்
இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இதில் எந்த உண்மையும் இல்லை. ஒரு பொது நபராக நான் ஆர்வத்தின் கீழ் இருப்பேன் என்று புரிந்து கொள்கிறேன். ஆனால், நாம் தவறான தகவல்களை தள்ளி வைப்பது நல்லது. இது ஒரு பொறுப்பான வேலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
There is no truth to this.
— Hrithik Roshan (@iHrithik) November 20, 2022
As a public figure, I understand I'll be under the lens of curiosity, but it's best if we keep misinformation away, especially in our reportage, which is a responsible job. https://t.co/jDBQF0OvdL
- தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார்.
- தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது.
- ஃபைட்டர் படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார்.
இந்தியாவின் நடன சூப்பர் ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஹிரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் தற்போது ஃபைட்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'ஷேர் குல் கயே' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.
நடன அசைவுகளில் தனக்கு நிகர் இல்லை என்ற அளவுக்கு ஆடும் திறன் கொண்ட ஹிரித்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலிலும் தனக்கே உரிய பாணியில் நடனத்தை மிரட்டியுள்ளார். ஹிரித்திக் திரையுலகில் 'கஹோ நா ப்யார் ஹே' 'கபி குஷி கபீ கம்', 'தூம் 2' போன்ற படங்களில் ஆடியதை யாரும் இன்றளவும் மறக்க முடியாத வகையில் உள்ளது. இந்த வரிசையில் ஃபைட்டர் படமும் இணைந்து இருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு ஷாம் ஷெர் பதனியா என்கிற பேட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹிரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஃபைட்டர் படத்தின் டீசர்- அதிரடி ஆக்ஷன் மூலம் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 'ஷேர் குல் கயே' பாடலில் ஹிரித்திக் நடனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ஹிருத்திக் ரோஷன் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. தன் ஒவ்வொரு படத்திலும் தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டினார்கள்.
- சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்’.
- இப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'ஃபைட்டர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் மிருதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள் என்பது நிச்சயம். 'ஃபைட்டர்'படத்தின் டிரைலர் 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.

'ஃபைட்டர்' திரைப்படம் இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படமாகும். அத்துடன் இது 3d imax வடிவத்திலும் வெளியாக உள்ளது.
- சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை (ஜனவரி 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வான்வழியில் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபைட்டர்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் 'ஃபைட்டர்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இயக்குனர் சித்தார்த் கூறியதாவது:-
'ஃபைட்டர்' லட்சியம் கொண்ட படம். 2024-ம் ஆண்டு மீண்டும் அதே பதட்டத்துடன் தொடங்குகிறது. பதான் மீது பொழிந்த அதே அன்பை ஃபைட்டருக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
- ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
- ஜுனியர் என்.டி.ஆர். இணைவது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார்.
2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார்.

வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார்.
அந்த வகையில் வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்து எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார்.
- இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
- அடுத்த 4 ஆண்டுகளுக்கு இமாச்சலில் ஹிருத்திக்கின் எந்தப் படமும் படமாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
கங்கனா - ஹ்ரித்திக் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் இருந்து நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்ற பிறகு, ஹ்ரித்திக் ரோஷனுடனான கங்கனா ரனாவத்தின் பகை பற்றி நடிகை சோனாலி தாக்கர் தேசாய் கேலி செய்தார்.
இதுதொடர்பாக நடிகை சோனாலி தாக்கர் தேசாய் தனது எக்ஸ் தளத்தில்,
"அடுத்த 4 ஆண்டுகளுக்கு இமாச்சலில் ஹ்ரித்திக்கின் எந்தப் படமும் படமாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை" என்று கேலியாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
- பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கியிருந்தார்கள்.

விக்ரம் வேதா
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் திரையுலகினர் என பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை போன்று இந்தியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் உருவாகி உள்ளது. இப்படத்தின் திரைக்கதை வடிவத்தை இந்தி திரையுலகம் வியப்பில் பார்த்து வருகிறது. இப்படம் மூலம் இந்தியில் தங்களுடைய தடத்தை பதித்துள்ள புஷ்கர்-காயத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
- புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் விக்ரம் வேதா.
- இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

விக்ரம் வேதா
இந்த நிலையில், படத்தின் புரொமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது, "விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவிலும் நினைக்க முடியாது.

விக்ரம் வேதா
என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது, அந்தக் கதாபாத்திரம் செய்ததை மீண்டும் நீங்கள் செய்ய முடியாது. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொள்வதே அதற்கான எளிய வழி. எனவே, நான் பார்க்கும் விதத்தில் இதை அணுகினேன். அது தானாகவே வித்தியாசமாகவும், புதியதாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது'' என்றார்.
- விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பின்னணி இசை பணி முடிவடைந்துள்ளது. இதனை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

சாம் சி. எஸ் - ஹிருத்திக் ரோஷன்
மேலும் அந்த பதிவில், "வாய்ப்பளித்ததற்கு புஷ்கர்-காயத்ரி மற்றும் ஹிருத்திக் ரோஷனுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படமும் என் இசையும் பிடிக்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
'விக்ரம் வேதா' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Finished #vikramvedha BGM
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) September 22, 2022
Tnkq so much for the opportunity @PushkarGayatri and @hrithikroshan
Hope u will all like the movie and also "my music " 😎🤗
Eagerly waiting for the release #vikramvedha from 30th sep#SaifAliKhan @radhika_apte@RelianceEnt @TSeries @StudiosYNot pic.twitter.com/Ik9Ym7sssy