search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HTC U12 Plus"

    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

    புதிய யு12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் QHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் ஹெச்டிசி யு12 பிளஸ் 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த சென்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கிள் பிரைமரி கேமராஸ ஹெச்டிசி அல்ட்ராபிக்சல் 4, OIS மற்றும் 16 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 84 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, போக்கே மோட், ஏஆர் ஸ்டிக்கர், ஃபேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    3D கிளாஸ் பாடி மற்றும் மெல்லிய பார்டர்களை கொண்டுள்ள யு12 பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள எட்ஜ் சென்ச் 2 தொழில்நுட்பம் ஸ்குவீஸ் செய்து பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்கிறது. இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.



    ஹெச்டிசி யு12 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஹெச்டிசி சென்ஸ் UI
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் 4 கேமரா, 1.4μm பிக்சல், f/1.75
    - 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6
    - 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்லுசென்ட் புளு, செராமிக் பிளாக், ஃபிளேம் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 64 ஜிபி மாடலின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54,630), 128 ஜிபி மாடல் 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.58,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×