என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Huthi rebel fighters"
- உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
- தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.
காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.
- இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
- பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும்.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறும் போது, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.
அவர்கள் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு சுரங்கப்பாதையில் ரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் "ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என்றார்.
ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
- காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
- இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல் திவிரமடைந்து வருகிறது. காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
காசாவில் ஏராளமான கட்டிடங்கள், குண்டுவீச்சில் தரைமட்டமாகின. மேலும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளை இஸ்ரேல் குறி வைத்து உள்ளதாக காசாவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வானி ஆஸ்பத்திரியை இஸ்ரேலின் டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன. ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தளங்கள் சேதமடைந்து உள்ளன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 90 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. அங்கு புல்டோசர்கள் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காசாவில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்கான நேபாளிகள் உள்ளனர்.
மேலும் புதிதாக காயம் அடைந்தவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் இஸ்ரேல் தாக்குதல் வளையத்துக்குள் உள்ளது. இதனால் நோயாளிகள் தஞ்சமடைந்து பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.
ரஹிதா என்பவரும் அவரது மகள் சமரும் நடந்து சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தேவாலய வளாகத்துக்குள் மற்றவர்களை பாதுகாக்க முயன்றமேலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் தேவாலய வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இருந்த 3 இஸ்ரேல் பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பிடம் இருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர்.
- கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள்.
- செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடந்து வரும் போரில் ஹமாசுக்கு பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக வரும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.
அதன் படி கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் நாட்டு தொழில் அதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை அவர்கள் நடுக்கடலில் வழிமறித்து கடத்தி சென்றனர். இந்த நிலையில் செங்கடல் மற்றும் பாப்-அல் மண்டப் கடற்பகுதிகள் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.
நேற்று இஸ்ரேல் நோக்கி பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அந்த டிரோன்களை பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் இடைமறித்து தாக்கி வீழ்த்தியது. இதனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த டிரோன்கள் ஏமன் நாட்டு கடற்பகுதியில் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால் செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அதிபர் அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார்.
இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள நகரங்களின்மீது ஏவுகணைகளை வீசி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த புதன்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை சடா நகரின்மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 20-க்கும் அதிகமான குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின.
இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது. ஏமன் போராளிகள் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருதரப்பினருக்கும் அமெரிக்காவில் இருந்து போராயுதங்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்க அரசு விற்கவில்ல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், சடா நகரின் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும்சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி தலைமையிலான படைகள் ஒரு திருமண மண்டபத்தின் மீது நடத்திய வான்னழி தாக்குதலில் 131 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சனா நகரில் நடைபெற்ற ஒரு இறுதி ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட மேலும் ஒரு தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு தாக்குதல்களையும் குறிதவறி நடந்த அசம்பாவித சம்பவங்கள் என தெரிவித்து விட்டது. மேலும், அப்பாவி பொதுமக்களை ஹவுத்தி போராளிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் கூட்டுப்படை தளபதிகள் சமாதானம் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Yemenbusstrike #Yemenbusstrikekills40children
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்