search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai Creta"

    • டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும்.
    • பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், டாடா நெக்சான், மஹிந்திரா XUV400, எம்ஜி ZS வரவிருக்கும் மாருதி eVX மற்றும் டாடா கர்வ் போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தற்போது உள்நாட்டு சந்தையில் அதன் வெகுசன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.

    இந்நிலையில், வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ...

    1. வெளிப்புற தோற்றம்


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்ற ICE க்ரெட்டாவை போன்றே புகிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில் குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும். அதாவது, பிளான்க்டு-ஆஃப் முன்பக்க கிரில், ஏரோ திறனுள்ள சக்கரங்கள் மற்றும் பாடி பேனல்களில் எலெக்ட்ரிக் பேட்ஜிங் போன்றவை இருக்கும்.

    2. உட்புற தோற்றம்,

    வெளிப்புற தோற்றம் போல ICE க்ரெட்டாவை போன்றே உட்புற தோற்றும் இருக்கும். டேஷ்போர்டு, இரட்டைத் திரை அமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை அப்படியே இருக்கும். இருப்பினும், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் செலக்டர் ஆகியவை பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்று ஸ்டீயரிங் வீல்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

    3. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெய்ன்

    பவர்டிரெய்னை பற்றி சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடலில் முன் சக்கரங்களில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 45kWh பேட்டரி பேக்கை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    சமீபத்தில் நிறுத்தப்பட்ட கோனா EV-யிலிருந்து சரியான மோட்டார் விவரக்குறிப்பை ஹூண்டாய் பயன்படுத்தும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால், 138 பிஎச்பி மற்றும் 255 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    4. ரேஞ்ச் மற்றும் சார்ஜர்

    இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும். அதிகரித்த செயல்திறனுடன், இந்த எலெக்ட்ரிக் கார் 500 கிலோமீட்டர் வரை செல்லும். க்ரெட்டா EV ஆனது 50 kWh வரை DC ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் கிடைக்கும். இது குறைவான சார்ஜிங் நேரத்தை உறுதி செய்யும். 100 kWh அல்லது அதற்கும் அதிகமான DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    5. வெளியீடு மற்றும் விலை விபரம்

    தற்போதைய தகவல்களின் படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா EV இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV 400 EV, டாடா நெக்சான் EV மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி eVX மற்றும் Tata கர்வ் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    எலெக்ட்ரிக் கார்களின் விலை பொதுவாக அவற்றின் ICE மாடல்களை விட அதிகம் என்பதால், க்ரெட்டா EV ஆரம்ப விலை ரூ. 15 முதல் 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.

    • இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது.
    • கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.

    கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிரெட்டா. கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கிரெட்டாவின் ஈவி (EV) எனப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.




     


    தற்போது இந்தியா சாலைகளில் இந்த கிரெட்டா EV-யை சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். அப்படி கிரெட்டா EV சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரெட்டா EV மாடல் ரூ.15 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரெட்டா EV காரில் என்னனென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    ×