என் மலர்
முகப்பு » hyundai i20
நீங்கள் தேடியது "Hyundai i20"
ஹூன்டாய் நிறுவனத்தின் i20 பிரீமியிம் ஹேட்ச்பேக் மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Hyundai #Car
இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் ஹூன்டாய் i20 நிலையான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூன்டாய் i20 இன்றும் கணிசமான விற்பனையை பெற்று வருகிறது.
இந்தியாவில் மட்டும் ஹூன்டாய் i20 ஹேட்ச்பேக் 8.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் ஹூன்டாய் i20 இதுவரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் இருவித வடிவமைப்புகளில் கிடைக்கும் ஹூன்டாய் i20 இரு கதவுகள் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கதவுகள் கொண்ட ஹூன்டாய் i20 குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
2008 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை ஹூன்டாய் i20 வெளியான நிலையில், இரண்டாவது தலைமுறை மாடல் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஹூன்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 ஹேட்ச்பேக் மாடலை இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூன்டாய் i20 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்-பில்ட் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் மற்றும் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் ஹூன்டாய் i20 விற்பனை செய்யப்படுகிறது.
×
X