என் மலர்
நீங்கள் தேடியது "IAF Jaguar"
இந்திய விமானப்படையின் விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து பைலட் வெளியே குதித்து உயிர்தப்பினார்.
ஜாம்நகர்:
குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில் இருந்து ஜாகுவார் போர் விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தை இயக்கிய பைலட், காலை 9.20 மணியளவில் குறிப்பிட்ட ஓடுபாதையில் தரையிறக்க தயாரானார்.

இது சிறிய அளவிலான விபத்துதான் என்றும், சரியான சமயத்தில் பைலட் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்று தினங்களுக்கு முன் கட்ச் பகுதியில் ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை பைலட் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #IAFJaguarCrashed

அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த பைலட், அவசரம் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். அதேசமயம் விமானம் ஓடுபாதையில் நிற்பதற்குள், வெளியே குதித்து உயிர்தப்பினார். விமானம் மட்டும் சிறிய அளவில் சேதமடைந்தது.