search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iaf pilot wing commander"

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தான் இன்று சுட்டு வீழ்த்தியதாக கூறும் இந்திய போர் விமானத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய இந்திய வீரர் அபினந்தன் வர்தமானிடம் அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கையில் ஒரு குவளையில் உள்ள தேனீரை  பருகியவாறு அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிமான பதில்களை அவர் தவிர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    நான் இந்திய விமானப்படையை சேர்ந்த ‘விங் கமாண்டர்’ அபினந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

    எங்களுடன் இப்போது இருப்பதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்று ஒரு அதிகாரி அபினந்தனை கேட்கிறார்.

    ‘நான் இது தொடர்பாக என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டது முதல் இப்போதுவரை அவர்கள் என்னை நன்றாக நடத்தி வருகின்றனர். 

    என்னுடைய தாய்நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகும் இந்த கருத்தை நான் மாற்றி தெரிவிக்க மாட்டேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகவும் கண்ணியான (ஜென்ட்டில்மேன் மேன்) முறையில் என்னை நடத்தினார்கள். அவர்கள் ராணுவத்தினர் இந்தியாவிடம் பிடிபட்டாலும் இதேபோல் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என அபினந்தன் பதிலளிக்கிறார்.

    இந்தியாவில் நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற கேள்விக்கு, ‘நான் இதை உங்களிடம் தெரிவிக்க கூடாது. என்றாலும், இந்தியாவின் தென்கோடி பகுதியை சேர்ந்தவன்’ என்கிறார்.  நீங்கள் திருமணமானவரா? என்னும் கேள்விக்கு ‘ஆம்’ என்கிறார். தேனீர் எப்படி உள்ளது? என்பதற்கு மிக அருமையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

    ‘நீங்கள் எந்தவகை போர் விமானத்தில் பறந்து வந்தீர்கள்? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளிப்பதை தவிர்க்கும் அபினந்தன், ‘மன்னிக்கவும் எரிந்து விழுந்த விமானத்தின் சிதிலங்களை கொண்டு நீங்களே யூகித்துக் கொள்ளலாம்’ என்று சாதுரியமாக கூறுகிறார்.

    போர் விமானத்தில் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்கான முக்கிய நோக்கம் என்ன? என்னும் கடைசி கேள்விக்கு ‘மன்னிக்க வேண்டும். இதற்கு நான் உங்களுக்கு பதிலளிக்க இயலாது’ என துணிச்சலாக அபினந்தன் பதில் கூறும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation #IAFpilotAbhinandan #BringBackAbhinandan

    ×