search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Rules"

    கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தினால் இனிமேல் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். #ICC
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான கேப்டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலியா வீரர்கள் பான்கிராப்ட், கேப்டன் ஸ்மித், துணைக்கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியது தெரியவந்தது. இதனால் ஐசிசி அவர்களுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்ததுடன், அபராதமும் விதித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்தான் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடைவிதித்தது.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இலங்கை கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.



    இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிமுறையை தெளிவாக வகுக்க வேண்டும் என்றும் முன்னணி வீரர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் ஐசிசியின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் பந்தை சேதப்படுத்தினால், குற்றத்திற்கான லெவல் 4-ன் கீழ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. இதனால் இனிமேல் பந்தை சேதப்படுத்திய விவகாரம் நிரூபிக்கப்பட்டால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும்.
    ×