search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "important"

    இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளாம்.
    பொதுவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம். இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான்.

    தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை.

    அலுவலக நண்பர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட அந்தரங்க விஷயங்களை, அவருடன் உறவு சீர்கெட்ட நிலையில் அலுவலகத்துக்குள் அம்பலப்படுத்துவதோ, பரப்புவதோ கூடவே கூடாது. அடுத்தவரின் கோப்புகள், டைரி, போன், அவர் இல்லாத நேரத்தில் திறந்து பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது, அவர்களின் பணிக்குறிப்புகள், கணினித்திரை இவற்றைத் தேவையின்றி பார்த்தல் அவரின் அந்தரங்க எல்லையைத் தொடும் செயலே.

    அலுவலகத்தில், அலுவலகப் பணிகளுக்கே முன்னுரிமைகொடுக்க வேண்டும். மருத்துவர், மனநல ஆலோசகர், வழக்கறிஞர், செய்தியாளர், ஆலோசகர் போன்றோரிடம் ஆலோசனைக்காக வருபவர்கள், பிறரிடம் பகிர்ந்துகொள்ளாத தகவல்களைக்கூடக் கூறுவார்கள். இந்த அந்தரங்க விஷயங்களைக் கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளிப்படுத்தக் கூடாது.

    சிறியவர், பெரியவர் பேதமின்றி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மதிக்கப்படவேண்டியதே. சிறியவர்கள்தானே என்று குழந்தையின் தன்மதிப்பைக் குறைக்கும் விஷயங்களை வெளிப்படுத்தவோ கிண்டல் செய்யவோ கூடாது. அதுபோல, பதின்வயது பிள்ளைகளை குறிப்பிட்ட எல்லைவரை கண்காணிக்கலாமே தவிர, அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைச் சோதிப்பது தவறு. பெரியவர்கள் தம்மைப் புரிந்துகொள்வார்கள், தங்கள் மதிப்பு குறையாது என்ற நம்பிக்கை ஏற்படும்போது பிள்ளைகளும் நிச்சயம் வெளிப்படையாக இருப்பார்கள்.

    அதேபோல வீட்டில் இருக்கும் முதியவர்களின் தனி உரிமைகளும் அந்தரங்கமும் காக்கப்பட வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து நண்பர் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட விஷயங்களை, நமக்கு நெருக்கமான வேறொருவரிடம் பகிர்வது, அந்த நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்படவில்லை எனில், நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நட்பையும் இழக்க நேரிடும். 
    மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பசு இறைச்சி விவகாரத்தில் மூவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் கடும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே விமர்சனம் செய்தனர். 

    இந்நிலையில் பெங்களூருவில் தி இந்து பத்திரிக்கையின் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். 

    பசுக்கள் வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. எனக்கு அதில்  நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

    கமல்நாத் மத்தியபிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம் என கூறியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் என்று டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். #Modi #Education #Innovation
    புதுடெல்லி:

    டெல்லியில் விஞ்ஞான பவனில் எழுச்சிக்கான கல்வி தலைமைத்துவம் என்ற பொருளில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப்படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒரு நபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சம நிலையிலான வளர்ச்சியை அடையச்செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம்.

    முழுமையான கல்விதான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தி கூறி இருக்கிறார். நமது பழமையான பல்கலைக்கழகங்களான தக்சீலா, நாளந்தா, விக்ரம்சீலா ஆகியவவை அறிவுடன் புதுமைக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தன.

    புதுமை என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை ஒரு சுமையைப்போல தோன்றும்.

    இந்திய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நாங்கள் எதிர்கொள்கிற சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு எங்களுக்கு உதவும். நாம் நமது கல்வி நிறுவனங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்கள் வகுப்பறையில் படிக்கிற கல்வியை, நாட்டின் எதிர்பார்ப்புகளுடன் இணைக்க வேண்டும். குழந்தைகளை புதுமையை நோக்கி ஊக்குவிக்கவும், உயர் கல்வியைப் பெறவும், எழுச்சி பெறவும் ‘அடல் டிங்கரிங் லேப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கல்வியில் உள்ள கட்டமைப்பு மற்றும் முறைமைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும்.

    சமூகத்து நல்ல ஆசிரியர்களை தயார்ப்படுத்தி அளிப்பதுவும் முக்கியம். எண்ணியல் கல்வியை பரப்புவதற்கும், அரசு திட்டங்கள் குறித்து பெரிதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிஞர்களும், மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

    இளைய தலைமுறையினர் இந்தியாவுக்கு உலகளாவிய அடையாளத்தை தந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வி தொடர்பான பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தை புகழ்ந்தார்.

    கல்வியில் உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கு, மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  #Modi #Education #Innovation
    ×