search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imposition of hindi"

    • ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவிப்பின்படி இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவரும், முதல்-அமை ச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி -மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதன்படி ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பா ளர்கள் கே.இ.பிரகாஷ், சேகர், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லபாளையம் சிவக்குமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

    கோபி நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜன், கோபி முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோட்டைப்பகுதி செயலாளர் ராமச்சந்திரன்,

    பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வீ.சி.நடராஜன், கவுன்சிலர்கள் புனிதா சக்திவேல், புவனேஸ்வரி பாலசுந்தரம், ஜெகதீஷ், சுகந்தி, கீதாஞ்சலி செந்தில்குமார், சுபலட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால்,

    பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வட்டச் செயலாளர் தங்கமணி, தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர்-மாணவரணி சார்பில் நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    நெல்லை-வள்ளியூர்

    நெல்லையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர்-மாணவரணி சார்பில் வள்ளியூா் பழைய பஸ் நிலையம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இக்கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா்கள் முன்னிலை வகிக்கிறாா்கள். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இளைஞரணி, மாணரவணி நிா்வாகிகள், தோழா்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதில் இளைஞரணி, மாணவரணி, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×