search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In an accident"

    • வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பவானி, 

    ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வகையில் 10 சக்கரங்கள் கொண்ட டாரஸ் லாரி இரும்பு பைப் ஏற்றிய லோடு உடன் வந்து கொண்டு இருந்தது.

    இந்த லாரியை மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் வெடிமுத்து டிரைவர் ஆக ஒட்டி வந்துள்ளார். உடன் கிளீனர் பெருமாள் என இருவர் வந்துள்ளனர்.

    பவானி ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை கூடுதுறை கோவிலுக்கு செல்லும் வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    லாரி கவிழ்ந்த பகுதியில் பல பொருள் அங்காடி ஒன்று இருந்த நிலையில் அந்த கடையின் முன் இருந்த பைக் சேதம் அடைந்துள்ளது. அதேபோல் அதிர்ஷ்டவசமாக லாரியில் வந்த டிரைவர் மற்றும் கிளீனர் பல பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    லேசான காயம் அடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இரு கிரைன் வரவழைத்து 2 மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த டாராஸ் லாரியை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். 

    • காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பவானி, சலங்கை பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கட்டிட மேஸ்திரி.

    சம்பவத்தன்று செல்வராஜ் காஞ்சிக்கோ வில் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வத ற்காக கவுந்தப்பாடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    • ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கோபால–கிருஷ்ணன்(25).கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கோபால கிருஷ்ணன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி பிரசவத்திற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் அனுமதிக்கப்ப ட்டார்.

    கடந்த 24-ந் தேதி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதில் சிறுமியின் நிலைமை மோசமானதால் ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார்.

    அங்கு உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.

    இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 27-ந் தேதி அதிகாலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மொடக்கு றிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல் ஆம்பு லன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் என்பவர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47).

    சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

    அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டிருந்தனர்.
    • அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). கூலித்தொழிலாளி.

    இவரும் இவரது நண்பரும் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்தி ருந்த ராமச்சந்திரன் கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்த வர்கள் ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×