search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in electricity charges"

    • தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர்.
    • அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

    தூத்துக்குடி:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோச னையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு சார்பாக வணிகர்களின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வர்த்தக பிரிவு மாநில செயலாளர் அசோக், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.என்.ஆர்.பரமசி வன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், முன்னிலையில், தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர். அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மனுவில் கடை உரிமையாளர்களிடம் பா.ஜ.க.வினர் கையொப்பம் வாங்கினர்.

    நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மண்டல் தலைவர் மாரிராஜ்,வடக்கு மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மதிராஜன், பாலசேகர்,செல்லப்பன்,வீரமணி,பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம், முத்துகிருஷ்ணன், அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் புனிதா, பொய்சொல்லான், செல்வம், சங்கர்கணேஷ், லெட்சுமி சிலம்பொழி, சோடா முருகேசன், ராஜ்குமார், புவனேஸ்வரன் கிளை தலைவர்கள் சுடலை, சவுந்தர்ராஜன், ராஜ கோபால், விக்னேஷ், சுரேஷ், புகழ் செந்தூர்பாண்டி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடை பயணமாக சென்று வியாபாரிடம் மனுக்களை பெற்றனர்.

    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    திருச்சி:

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறையில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×