search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Cricket"

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்துள்ளது என்று தெண்டுல்கர் மற்றும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND

    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.

    இந்தியா தொடரை வெல்ல புஜாராவும் (521 ரன் குவிப்பு), பும்ராவும் (21 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர். அதன் விவரம்:-

    தெண்டுல்கர்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான நாள் ஆகும். இதை பொக்கி‌ஷமாக கருதுகிறேன். இந்திய வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

    பேட்டிங்கில் புஜாரா மாறுபட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் இணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ரிசப்பன்ட், குல்தீப் யாதவ் அணிக்கு மேலும் பலம் சேர்க்க கூடியவர்கள்.

    கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட்டை வீரர்கள் பெருமை அடைய செய்து விட்டனர். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். அந்த தருணங்கள் மிகவும் சிறப்பானது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சாதித்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. உடல் தகுதியிலும் சிறப்பாக உள்ளது. இதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னர் இல்லாதது இந்தியாவின் தவறு அல்ல. ஆஸ்திரேலிய அணி தான் அவர்கள் இல்லாமல் களம் இறங்கியது. இருவரது தடை காலத்தை குறைத்து இருக்கலாம்.

    கங்குலி: இது ஒரு வெறித்தனமான வெற்றியாகும். இந்திய வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். 400 முதல் 600 ரன்கள் வரை குவித்தது மிகவும் முக்கியமானது. புஜாரா, பும்ரா அபாரமாக செயல்பட்டு தொடரை வெல்ல காரணமாக இருந்தார்கள்.

    ரிசப்பன்ட் நன்றாக விளையாடினார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 2003-04-ல் இருந்த எனது அணியுடன், தற்போதுள்ள வீராட்கோலி அணியை ஓப்பீட்டு கேட்கப்படுகிறது. நான் எப்போதுமே ஒப்ரீஜீடமாட்டேன். அதனால் தான் இது மாதிரியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.

    வி.வி.எஸ்.லட்சுமண்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வரலாறு படைக்க முடிந்தது. ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.

    பி‌ஷன்சிங் பெடி: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மண்ணில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலியாவில் பெற்ற இந்த வெற்றி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் வீழ்த்தியது சிறப்பானது. புஜாராவும், பும்ராவும் நிலையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

    ஷேவாக்: இந்திய வீரர்களை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். #AUSvIND

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 92 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் சதத்தை தவறவிட்டார். #INDvWI #RishabhPant
    ஐதராபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து இருந்தது. பிரித்விஷா 70 ரன் எடுத்தார். ரகானே 75 ரன்னும், ரிசப்பந்த் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானேயும், ரி‌ஷப்பந்தும் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

    ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் ரகானே ஆட்டம் இழந்தார். அவர் 183 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 314 ஆக இருந்தது.

    அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஹோல்டரின் 30 ஓவரில் ரகானேயும் (முதல் பந்து), ஜடேஜா (3-வது பந்து) பெவிலியன் திரும்பினார்கள்.


    மறுமுனையில் இருந்த இளம் வீரரான ரிசப் பந்த் தனது 2-வது சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 92 ரன் எடுத்து இருந்தபோது கேப்ரியல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அவர் 134 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

    ரிசப்பந்த் 2-வது முறையாக செஞ்சூரியை தவறவிட்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 92 ரன்னில் வெளியேறி இருந்தார்.

    அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 322 ஆக இருந்தது. 8 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது.

    8-வது விக்கெட்டுக்கு அஸ்வின்- குல்தீப் யாதவ் ஜோடி ஆடியது. #INDvWI  #RishabhPant
    ×