என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » indiafinishpakistan
நீங்கள் தேடியது "IndiafinishPakistan"
இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் எச்சரித்துள்ளார். #IndiafinishPakistan #IndiaattackPakistan #Indiaattackbombs #Musharraf
துபாய்:
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம் எனவும் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் மோடி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் துபாய் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.
புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பூசல் அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்குமா? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற செய்தியாளர்களுக்கு பதிலளித்த முஷரப், ‘இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக 20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே இந்தியா அழித்துவிடும்.
எனவே, அணு ஆயுதப்போர் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த முடியாதவாறு நாம் முதல் தாக்குதலை நடத்த வேண்டும். 50 அணுகுண்டுகளை வீசி முதல் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தயாரா?’ என எதிர்கேள்வி எழுப்பினார்.
1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அதிபராக பதவிவகித்த பர்வேஸ் முஷரப், அதற்கு முன்னர் 1999-ம் ஆண்டில் இந்தியா நடத்திய கார்கில் போர் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்து போரை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiafinishPakistan #IndiaattackPakistan #Indiaattackbombs #Musharraf
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X