search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Alliance"

    • தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
    • ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.

    மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.

    மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×