search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian citizenship"

    • மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
    • நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்
    • அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாலாஜா அருகே உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ,வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் விருப்பப்பட்டு இங்கேயே தங்கி உள்ளனர்.

    மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாத தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் மீனவர்களின் உரிமை பாதிக்கப்படுவதால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல கட்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அதை இந்தியாவுடன் இணைத்து மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

    இவர் அவர் கூறினர்.

    பின்னர் அவர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய படத்தில் நடைபெற்ற சிறப்பு சண்டியாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மோகன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் வாழும் பாகிஸ்தானை சேர்ந்த 3 சகோதரர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. #Pakistanbrothers #Indiancitizenship
    ஐதராபாத்:

    இந்தியாவின் (முன்னாள்) ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கடண்ட்க்ஹ 1988-ம் ஆண்டு தனது தூரத்து உறவினரான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு, கணவருடன் பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினார்.

    அங்கு 3 ஆண் குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண் பிற்காலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2004-ம் ஆண்டு 3 குழந்தைகளுடன் நிஜாமாபாத்தில் உள்ள பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

    தனது மகன்களுக்கான விசாவை அவ்வப்போது புதுப்பித்து வந்த அந்தப் பெண் அவர்கள் மூவருக்கும் இந்தியாவில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை அளிக்கக்கோரி நிஜாமாபாத் மாவட்ட நிர்வாகத்திடம் மனு செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

    இதன் அடிப்படையில், அவர்கள் மூவருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான உத்தரவை நிஜாமாபாத் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நேற்று அந்த குடும்பத்தாரிடம் அளித்தார்.

    தற்போது இந்திய குடியுரிமை பெற்றுள்ள முஹம்மது சனான், முஹம்மது ருமான் மற்றும் முஹம்மது சைப் ஆகிய இந்த மூன்று சகோதரர்களும் 20 முதல் 27 வயதுக்குட்பட்ட வாலிபர்களாக உள்ளனர். இவர்களில் மூத்தவர் பிடெக் பட்டதாரி.

    இந்தியாவில் தொடர்ந்து 7 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்து வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistanbrothers #Indiancitizenship
    ×