search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian couple"

    • வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர்.
    • கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    சில தம்பதிகள் தங்களது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட ஆசைபடுவார்கள். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் ரசிகர்களாக இருக்கும் ஒரு தம்பதி தங்களது 36-வது திருமண நாளை லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    அந்த தம்பதியினர் டென்னிஸ் போட்டிகளை நேரில் பார்த்தவாறு தங்களது கனவை நிறைவேற்றி கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அந்த வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர். அவர்களின் இந்த கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    இதைப்பார்த்த பயனர்கள் அந்த தம்பதியினரை வாழ்த்தி பதிவிட்டனர். அந்த தம்பதியினர் கூறுகையில், 1970-களில் இருந்து டென்னிஸ் ரசிகராக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. ஏனெனில் இது எங்கள் இருவரின் கனவாகும் என்று குறிப்பிட்டனர். மேலும் இந்திய டென்னிஸ் வீரர்கள் விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் எனவும் தம்பதிகள் தெரிவித்தனர்.

    • வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).

    இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.

    அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.

    தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்திய தம்பதி விசு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்றனர்.



    அப்போது அவர்கள் 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்தனர். கணவன்-மனைவி இருவரும் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ படம் எடுத்தபோது உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இந்த உண்மை தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills 
    ×