என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian killed"
லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று காலை இந்திய தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர்வாசி ஒருவர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் அந்த பாகிஸ்தானியை உடைமைகளுடன் வெளியேறுமாறு இந்தியர் கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தானியர் அந்த அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பி வந்த பாகிஸ்தான் நபர் ஆத்திரமடைந்து தனது பையில் இருந்து கத்தியை எடுத்து இந்தியரைக் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இந்தியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சில் கத்தியால் ஆழமாக குத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், அறைக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ஹோட்டலின் மேற்பார்வையாளர் கூறினார்.
இச்சம்பவத்திற்கு முன்னதாக மது அருந்தியிருந்ததாகவும், எந்தவித விரோதத்தோடும் கொலை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், விசாரணையின் போது கூறினார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PakManJailed
நியூஜெர்சி:
தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.
அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.
இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.
அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.
சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.
தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்