என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian President"
- டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி உதகை செல்கிறார்.
- ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி அன்று தமிழ்நாடு வருகிறார்.
அதன்படி, டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.
நவம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் உதகையிலும், நவம்பர் 30ம் தேதி திருவாரூரிலும் சில நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார்.
- கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
இந்திய கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2022-ம் ஆண்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.20 கோடி செலவில் இந்த கப்பல் அதிநவீன ஆட்டோமெடிக் அம்சங்களுடன் கட்டப்பட்டது. சுமார் 262.5 மீட்டர் நீளமும், 61.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் 43 ஆயிரம் டன் எடை கொண்டது. இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் இதுதான் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும்.
இது 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரானது. இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கிய எந்திரங்கள், உபகரணங்கள் மூலம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பலில் மிக் 29 கே. ரக போர் விமானம், கமோல் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்.60 ஆர். மல்டி போர் ஹெலிகாப்டர் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் நிறுத்தி வைக்கலாம்.
அதி நவீன வசதிகளுடன் உருவான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் நீர் மூழ்கி கப்பல் பயிற்சிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் புறப்படுதல், தரை இறங்குதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.
இந்த கப்பலில் 2,200 பெட்டிகள் உள்ளது. பெண் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 1,600 பேர் இந்த கப்பலில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இக்கப்பலில் உள்ளது.
இந்திய கடற்படையில் ஒரு மைல்கல்லாக திகழும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் இன்று கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி முர்முவை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவா கடற்கரையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்க்கப்பலில் பயணம் செய்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவர் முதன் முறையாக போர் கப்பலில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார். கப்பலின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் குறித்து கடற்படை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
#WATCH | President of India, Droupadi Murmu embarked on the Indigenous aircraft carrier INS Vikrant today and witnessed the full spectrum of the Indian Navy's multi-domain operations at the Arabian Sea off Goa Coast pic.twitter.com/we5GiVEpUY
— ANI (@ANI) November 7, 2024
- பெண்கள் சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்
- மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை
கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என கருத்து தெரிவித்தார். இவரது கருத்திற்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதி மீது உத்தர பிரதேசத்திலும், மகராஷ்டிரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். நேற்று அக்கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். முதல் நாள் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு மக்களவையிலும் மாநில சட்டசபைக்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக பெண்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதை விமர்சித்து உதயநிதி பேசினார்.
அதில் அவர் கூறியதாவது:
புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அத்துடன் கணவனை இழந்தவர். அதனால் அவரை அழைக்கவில்லை. நேற்றைய பாராளுமன்ற முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகையையெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இதுதான் சனாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
புதிய கட்டிடத்தை இந்திய ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார்.
- முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், " அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டது.
ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார். இதன்போது, குவஹாத்தியில் உள்ள சக்திபீட காமாக்யா கோயிலுக்கு முர்மு வழிபாடு செய்தார்.
- இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி பிலாய் இயக்குநர் ரஜத் மூனா, ஐஐடி காந்திநகர் இயக்குநராகவும், ஐஐடி தார்வாட் இயக்குநர் பசுமார்த்தி சேசு ஐஐடி கோவாவின் இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஐஐடி இயக்குநர்கள் – கே.என் சத்தியநாராயணா (ஐஐடி திருப்பதி) மற்றும் மனோஜ் சிங் கவுர் (ஐஐடி ஜம்மு), ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களான சேஷாத்ரி சேகர் மற்றும் ஸ்ரீபாத் கர்மல்கர் ஆகியோர் முறையே ஐஐடி பாலக்காடு மற்றும் ஐஐடி புவனேஷ்வரின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஐடி பிஹெச்யுவின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த ராஜீவ் பிரகாஷ் ஐஐடி பிலாய் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
- ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய கடற்படை தலைமையகத்திற்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அங்கு அவரை ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் வரவேற்றார். அப்போது ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும் 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கான்பெராவில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதுபோன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் இந்த மரியாதை அளிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #IndianPresident #RamNathKovind
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்