search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian vaccine"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
    • கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்

    கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

    ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

    இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.

    ×